அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - புதின் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - புதின் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்
x

ரஷியா - உக்ரைன் போர் விவகாரத்தில் புதினை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மாஸ்கோ:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் விரைவில் சந்திக்கக் கூடும் என்று ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், சந்திக்கும் இடம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் ரஷிய வெளியுறவு அமைச்சக ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு புதினைச் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில் புதினை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். உக்ரைன் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாக புதினை டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கக் கூடாது என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை டிரம்ப் ஒருபுறம் மிரட்டி வரும் நிலையில், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற இருக்கும் இந்தச் சந்திப்பு உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

1 More update

Next Story