ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த திட்டம்


ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த திட்டம்
x

குனார் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காபூல்,

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்க்கொண்டது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்தியாவின் திடீர் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் சிந்து நதி நீர், நிறுத்தப்பட்டதை போர் நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்று அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்.

இந்த நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் ஆப்கானிஸ்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குனார் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே இருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் போல ஆப்கானிஸ்தானுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story