கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட விரும்பினேன் - பஷிர் அல் அசாத்


கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட விரும்பினேன் - பஷிர் அல் அசாத்
x

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட விரும்பினேன் என்று சிரியா முன்னாள் அதிபர் பஷிர் அல் அசாத் தெரிவித்தார்.

டமாஸ்கஸ்,

சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்த நிலையில் அதிபர் பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த 8ம் தேதி கவிழ்ந்தது. அபு முகமது அல் ஜவ்லானி தலைமையிலான ஹயத் தஹிர் அல் ஷம் என்ற கிளர்ச்சிக்குழு சிரியாவில் ஆட்சியை கைப்பற்றியது. அதிபராக இருந்த பஷிர் அல் அசாத் ரஷியா தப்பிச்சென்றார்.

இந்நிலையில், சிரியாவில் ஆட்சி கவிழ்ந்தபின் முதல் முறையாக முன்னாள் அதிபர் பஷிர் அல் அசாத் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட விரும்பினேன்.

எந்த சூழ்நிலையிலும் அதிபர் பதவியை விட்டு விலக நான் நினைத்ததில்லை. எங்கும் அகதியாக தஞ்சமடையவும் நினைக்கவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிடவே நினைத்தேன்' என்றார்.


Next Story