மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்


மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்
x
தினத்தந்தி 19 July 2025 6:39 AM IST (Updated: 19 July 2025 6:45 AM IST)
t-max-icont-min-icon

மியான்மரில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

நைபிடா,

மியான்மரில் இன்று அதிகாலை 3.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 105 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 110 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று கடந்த 17-ந்தேதி ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது 80 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

1 More update

Next Story