டீப்சீக் செயலிக்கு தடை விதித்த தென்கொரியா


டீப்சீக் செயலிக்கு தடை விதித்த தென்கொரியா
x

கோப்புப்படம்

தென்கொரியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டீப்சீக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

சியோல்,

நொடிகளில் பல ஆயிரம் தரவுகளை கொட்டிக் கொடுக்கும் சீன ஏ.ஐ செயலியான டீப்சீக் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இதன்மூலம் மனிதனின் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளையும் கம்ப்யூட்டர்கள் செய்ய முடியும். எனவே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சீனாவும் டீப்சீக் என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான சில வாரங்களுக்குள்ளேயே உலகளவில் இது மிகவும் பிரபலமானது. அதன்படி தென்கொரியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டீப்சீக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தனியுரிமை கொள்கையை மீறுதல், தேசிய பாதுகாப்பு போன்ற அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை டீப்சீக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாதபடி ஆப்பிள் ஆப்ஸ்டோர் மற்றும் பிளேஸ்டோரில் இருந்து டீப் சீக் செயலி நீக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகளிலும் டீப்சீக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story