காங்கோவில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தல்: 3 சீனர்கள் கைது
12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
கின்ஷாசா,
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சட்ட விரோதமாக பல தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றை கள்ளச்சந்தையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பலர் அதிகளவில் வருமானம் ஈட்டுகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்தநிலையில் அங்குள்ள கிவு மாகாணத்தில் சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த காரில் இருந்த 3 சீனர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story