ஹாங்காங் அரசுக்கு எதிராக போராட்டம்: வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து


ஹாங்காங் அரசுக்கு எதிராக போராட்டம்: வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து
x

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் உதவி செய்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

பீஜிங்,

தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உதவி செய்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. எனவே வெளிநாட்டைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு ஹாங்காங்கில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story