சூடானில் உள்நாட்டு கலவரம்: இருளில் மூழ்கிய தலைநகரம்


சூடானில் உள்நாட்டு கலவரம்: இருளில் மூழ்கிய தலைநகரம்
x

Photo Credit: AFP

தினத்தந்தி 19 Jan 2025 6:00 PM (Updated: 19 Jan 2025 6:00 PM)
t-max-icont-min-icon

வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.

கார்டூம்,

சூடானில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு உள்நாட்டு கலவரமாக வெடித்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி தலைநகர் கார்டூம் அருகே மியாரோ நீர்மின் நிலையம் மீது துணை ராணுவப்படை வீரர்கள் டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் அந்த நீர்மின் நிலையம் கடும் சேதத்திற்குள்ளானது. குறிப்பாக நீர்மின் நிலையத்தின் மின்சார சேமிப்பு கலன்கள் வெடித்து சிதறின. இதனால் அங்கு மின்சாரம் உற்பத்தி பணி பாதிப்புக்குள்ளாகி மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகரில் உள்ள வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியது. நீர்மின் நிலையத்தை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டின் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறார்கள்.

1 More update

Next Story