பிரான்ஸ்: உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி


பிரான்ஸ்: உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
x
தினத்தந்தி 12 Feb 2025 3:54 PM IST (Updated: 12 Feb 2025 4:23 PM IST)
t-max-icont-min-icon

உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பாரிஸ்,

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் மெர்சிலி நகருக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு மசர்கசிஸ் கல்லறை தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் மற்றும் 2 ம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மசர்கசிஸ் கல்லறை தோட்டத்தில் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களில் 205 பேரின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

1 More update

Next Story