ரஷியாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் - கிம் ஜாங் அன்


ரஷியாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் - கிம் ஜாங் அன்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Dec 2024 1:30 AM IST (Updated: 1 Dec 2024 1:30 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு, வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

பியாங்க்யாங்,

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்தநிலையில் ரஷிய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.

அப்போது கிம் ஜாங் அன் கூறியதாவது, நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story