நைஜீரியா: பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா,
நைஜீரியாவின் மைதமா நகரில் உள்ள புனித டிரினிட்டி கிறிஸ்தவ ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பொருளாதார நெருக்கடியான நிலையில் மக்கள் அதிகம் வசித்து வரும் சூழலில், இந்த பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்தபடி சென்றனர். இந்த சம்பவத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். எனினும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என காவல் துறை செய்தி தொடர்பாளர் ஜோசபின் அடே கூறியுள்ளார்.
Related Tags :
Next Story