நியூசிலாந்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது


நியூசிலாந்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது
x

ரஷிய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து ராணுவ வீரர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் இளம் ராணுவ வீரர் ஒருவர் எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் ராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த ராணுவ வீரரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கடந்த 2020-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வந்ததும் அப்போது ரஷிய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. தொடர்ந்து அந்த ரஷிய பெண் மூலமாக நியூசிலாந்து நாட்டின் ராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கிய தளவாட அமைப்புகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து ரஷியாவுக்கு தகவல்களை கசியவிட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும்.

1 More update

Next Story