கடும் வறட்சி: வன விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டம்


கடும் வறட்சி: வன விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டம்
x

Photo Credit: AFP

தினத்தந்தி 30 Aug 2024 6:38 PM GMT (Updated: 31 Aug 2024 7:27 AM GMT)

"நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. பசி, பட்டினி அதிகரித்துள்ள நிலையில், பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொல்வதற்கு நமீபியா அரசு முடிவு செய்து இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் அதிகளவில் உள்ளன. இவை அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. கடந்த மூன்று தலைமுறைகளில் அவற்றின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.ஆனால் சமீப ஆண்டுகளில், 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, யானைகளின் எண்ணிக்கை 227,000-க்கும் அதிகமான யானைகளுடன் குறையாமல் இருக்கிறது. ஆனால், தற்போது கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படும் சூழ்நிலையில், அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


Next Story