கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது: இலங்கை மந்திரி பேட்டி

அரசியலுக்காக கூறப்படும் கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று இலங்கை மந்திரி கூறினார்.
கொழும்பு,
தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” எனப்பேசியிருந்தார். இந்நிலையில் இன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜித ஹேரத் கூறியதாவது;
தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறி வருகின்றனர். அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. அரசு மட்டத்தில் யாராவது கருத்து தெரிவித்திருந்தால், அதன் மீது கவனம் செலுத்தலாம். எனவே இவ்வாறான கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று கூறினார்.






