இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு


இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
x

இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

மாஸ்கோ,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்த கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் சென்றுள்ளார்.

இந்நிலையில், ரஷியாவில் இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுகினோவை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது


Next Story