ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை


ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
x
தினத்தந்தி 7 Sept 2024 5:36 AM IST (Updated: 7 Sept 2024 9:57 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலால் ஏராளமான கட்டுமானங்கள் தரைமட்டமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

காசா,

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாள்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினா்.

இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில்,

இஸ்ரேல் படையினா் வெளியேறுவதற்கு முன்னா் அவா்களின் 10 நாள் தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான கட்டுமானங்களை தரைமட்டமாகியிருந்தனா் என்று தெரிவித்தது. இது குறித்து பாலஸ்தீன வெளியுறுவத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் ஏற்படுத்திய நாசத்தை மேற்குக் கரை பகுதிக்கும் இஸ்ரேல் ராணுவம் கொண்டுவந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேற்குக் கரையின் ஜெனின் மற்றும் துல்கா்ம் பகுதியில் 'பயங்கரவாத எதிா்ப்பு' நடவடிக்கையைத் தொடங்கியதாக இஸ்ரேல் கடந்த மாதம் 27-ஆம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கையில் 39 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாகவும் சுமாா் 140 போ் காயமடைந்ததாகவும் பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.


Next Story