காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 38 பேர் உயிரிழப்பு


காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 38 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Oct 2024 3:46 PM IST (Updated: 25 Oct 2024 3:53 PM IST)
t-max-icont-min-icon

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story