இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
![இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்](https://media.dailythanthi.com/h-upload/2025/01/18/34669460-world-02.webp)
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜெருசலேம்,
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காசா-இஸ்ரேல் போர் வெடித்ததில் இருந்து, ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹவுதி அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மதிக்கவில்லை என்றால், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து மத்திய இஸ்ரேல் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. அதே சமயம், ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.