ஜெர்மனி: கார் பாகம் விற்பனை நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

ஜெர்மனியில் கார் பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்ததில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர்.
பெர்லின்,
கார்களுக்கு வேண்டிய பாகங்களை விற்பனை செய்து வரும் உலகின் மிக பெரிய நிறுவனம் பாஸ். ஜெர்மனியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் நேற்று கியாஸ் சிலிண்டர் ஒன்றில் இருந்து, சிலேன் என்ற வாயு கசிந்துள்ளது.
இதனால், நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்னவென பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அந்த சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில், 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர். மற்றொரு நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, வேறொரு நிறுவனத்தின் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய குடும்பத்தினருடன் எங்களுடைய நினைவுகள் உள்ளன என தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story