ரஷியாவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம் - மக்கள் வரவேற்பு

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக் கூடிய தானியங்கி மெட்ரோ ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த செப்டம்பர் 3-ந்தேதி பயணிகளுக்கான ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் சேவைகள் முறையாகத் தொடங்கப்பட்டதாக மாஸ்கோ நகர போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் மூலம் இயக்கப்படும் இந்த வாகனத்தில் ரேடார்கள், சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது வாகனம் அதன் பாதையில் துல்லியமாக செல்ல அனுமதிக்கிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த ரெயில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வாகன போக்குவரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story






