ஜெர்மனி: கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி


ஜெர்மனி: கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி
x

ஜெர்மனியில் கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் மன்ஹியம் நகரில் உள்ள டவுண்டவுன் பகுதியில் கார்னிவல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பரெடிபிளேட்ஸ் சதுக்கம் பகுதியில் காலை தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு வண்ண ஆடைகள் அணிந்து, வேடமணிந்து அணிவகுத்து சென்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு சாலையில் வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், கார் டிரைவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story