கனடாவில் விபத்துக்குள்ளான டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் - பலர் காயம்

அவசரகால குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ,
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 19பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விமானநிலையம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "எண்டெவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் CRJ900 விமானம், திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியது. விமானத்தில் மொத்தம் 80 பேர் இருந்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்." என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மதம் அமெரிக்காவில் ஒரு பயணிகள் ஜெட் விமானம் மீது ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.






