பிலிப்பைன்சில் கரையை கடந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
மணிலா,
பிலிப்பைன்சில் புதிதாக உருவாகி உள்ள வெப்ப மண்டல புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பிகோல் நகரில் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மேலும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பலத்த காற்றுக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.
Related Tags :
Next Story