ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது


ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது
x
தினத்தந்தி 4 Jun 2025 9:44 AM IST (Updated: 4 Jun 2025 12:04 PM IST)
t-max-icont-min-icon

இந்த பூஞ்சையால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.

வாஷிங்டன்,

சீனாவைச் சேர்ந்தவர்கள் யுன்கிங் ஜியான் (33), ஜூன்யோங் லிபு(34). இவர்களில் ஜுன்யோங் லிபு, சீன பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர்கள் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் இதனை ஆராய்ச்சி செய்ய கடந்த ஜூலை மாதம் 2024ம் ஆண்டு அமெரிக்கா வந்தனர். அப்போது எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறையினருடன் இணைந்து விமான நிலையம் வந்த லியுவிடம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஆபத்தான நோய்க்கிருமியை லியு அமெரிக்காவுக்கு கடத்தி வந்ததாகவும் இந்த நோய்க்கிருமி 'வேளாண் பயங்கரவாத ஆயுதம்' என்று விவரிக்கப்படும் ஒரு பூஞ்சை என்றும் கூறப்படுகிறது. இந்தப் பூஞ்சை பயிர்களில் "கருகல்" ஏற்படுத்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகிறது.

இதில் புசேரியம் கிராமினேரம் எனப்படும் பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றில் ஒரு நோயை ஏற்படுத்தும், இது உணவில் கலந்தால் பயிர்களை அழித்து, மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் ஆபத்தான நோய்கிருமியை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட லியுவை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனை அவரது காதலியின் ஆராய்ச்சிக்காக கொண்டு வந்ததாக தெரியவந்ததை அடுத்து யுன்கிங் ஜியானும் கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story