ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்; வங்காளதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
டாக்கா,
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. நிலமை கையை மீறி சென்றதால் வங்காளதேச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கும் ஷேக் ஹசீனா, எப்போது வங்காளதேசம் திரும்புவார் என்ற எந்த தகவலும் இல்லை. வங்காளதேசத்தில் தற்போது முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story