திடீர் பயணமாக ஈராக் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி திடீர் பயணமாக ஈராக் சென்றார்.
பாக்தாத்,
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் திடீர் பயணமாக இன்று ஈராக் சென்றார். தலைநகர் பாக்தாத் சென்ற பிளிங்கன் ஈராக் பிரதமர் முகமது அல் சுடனியை சந்தித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர், சிரியாவில் நடைபெற்ற ஆட்சி மாற்றம், ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் ஆண்டனி பிளிங்கனின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அடுத்த மாதம் அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அவரது ஆட்சிகாலத்தில் மத்திய கிழக்கில் முக்கிய மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஈராக் சென்றுள்ள பிளிங்கன் முன்னதாக ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story