நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் பலி


நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2024 11:22 AM GMT (Updated: 16 Oct 2024 12:30 PM GMT)

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அபுஜா,

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 94 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 94 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவாதகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு ரெயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story