சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: போலீசார் 13 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் போலீசார் 13 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்,
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவின் புதிய அதிபராக ஹயத் தஹிர் அல் ஷியாம் பதவியேற்றார்.
அதேவேளை, அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் கடற்கரை நகரமான லடாகியா மாகாணம் அல்வாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்தனர். அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதல் நடத்தினர் என்பதை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story