பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான்கள் உயிரிழப்பு


பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 Dec 2024 9:43 PM IST (Updated: 30 Dec 2024 5:37 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தலீபான் அமைப்பை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தலீபான்களிடையே மோதல் வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கும் தெஹ்ரிக்-இ-தலீபான் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வருவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தலீபான் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வாரிஸ்தான் அகதிகள் பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலீபான் அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கோஸ்காரி, மதா சங்கர், கோட் ரகா மற்றும் டாரி மெங்கல் உள்ளிட்ட இடங்களில் ராணுவ சோதனை சாவடிகளை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 8 தலீபான்கள் பலியானதாகவும், பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. அதே சமயம், தலீபான்கள் தரப்பில் 19 பாகிஸ்தான் வீரர்களை சுட்டுக் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story