இந்தியா-பாகிஸ்தான் போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்க அதிபர் டிரம்ப்


இந்தியா-பாகிஸ்தான் போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்க அதிபர் டிரம்ப்
x

இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்கும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

வாஷிங்டன்,

காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 4 நாட்களுக்கு பிறகு சண்டை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று இந்தியா தெரிவித்தது. ஆனால் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் இந்தியா-பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் தென் கொரிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:– இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்கும். அந்த போர் உள்பட உலகின் பல போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். ஏனென்றால் அந்த போரில் ஏற்கனவே 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.

அந்த பரபரப்பான சூழலில், நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக் கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ளமாட்டோம். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் முடித்துக் கொள்ளவும் என்று அவர்களிடம் கூறினோம். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த நாட்டின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 30-க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story