சூடானில் துணை ராணுவ தாக்குதல்: 50 பேர் பலி


சூடானில் துணை ராணுவ தாக்குதல்: 50 பேர் பலி
x

சூடானில் துணை ராணுவ தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கார்டோம்,

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சூடானின் அல் கம்லின் பகுதியில் உள்ள அல்செரிஹா கிராமத்தின் மீது அதிக அளவில் துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குடிமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அரசு சாரா குழுக்கள் தெரிவித்துள்ளன.

நேற்று காலை துணை ராணுவப்படையினர் அல் கம்லின் பகுதியின் அல்செரிஹா கிராமத்தின் மீது அதிக அளவில் துப்பாக்கி சூடு மற்றும் ஷெல் குண்டுகளை வீசினர் என்று கெசிரா மாநிலத்தின் தலைநகரான வாட் மதனியில் உள்ள ஒரு தன்னார்வள குழுவான எதிர்ப்புக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அல்செரிஹா கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்" என்றும் தெரிவித்துள்ளது.


Next Story