டோக்கியோவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.. குழந்தை பிறப்பை அதிகரிக்க புதிய திட்டம்


டோக்கியோவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.. குழந்தை பிறப்பை அதிகரிக்க புதிய திட்டம்
x

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

டோக்கியோ:

ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளது. 2022-ம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது. ஆகவே ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் கவர்னர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.


Next Story