உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்; 21 பேர் பலி


உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்; 21 பேர் பலி
x

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 143வது நாளாக நீடித்து வருகிறது.

கீவ்,

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 143வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் சுமா நகர் மீது ரஷியா இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 83 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்

1 More update

Next Story