ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது அதிகரித்து இருப்பது ஏன்? புவி அறிவியல் அமைச்சகம் விளக்கம்


ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது அதிகரித்து இருப்பது ஏன்? புவி அறிவியல் அமைச்சகம் விளக்கம்
x

காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன என்று ரவிச்சந்திரன் கூறினார்.

சென்னை,

சமீப காலமாக குறிப்பிட்ட சில இடத்தில் அதிகமாக மழை பெய்வது அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது அதிகரித்து இருக்கும் நிலையில், காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் கூறியதாவது:-

கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன. 'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது. இதனால் புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும்" என்றார்.


Next Story