லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு


LIVE
லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்: கனமழை நீடிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2024 1:49 AM GMT (Updated: 15 Oct 2024 10:59 AM GMT)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை


Live Updates

  • 15 Oct 2024 10:47 AM GMT

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • சென்னை அமைந்தகரையில் உள்வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு சுவர்
    15 Oct 2024 10:45 AM GMT

    சென்னை அமைந்தகரையில் உள்வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு சுவர்

    சென்னையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுவர் பல அடி தூரத்திற்கு உள்வாங்கியது.அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் முழுவதும் விரிசல் அடைந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

  • வேளச்சேரில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்
    15 Oct 2024 10:39 AM GMT

    வேளச்சேரில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்

    வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில்  கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் 10க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. முழங்கால் வரை வெள்ளநீர் சூழ்ந்ததால் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வீடுகளில் சிக்கிய முதியவர்கள், பெரியவர்கள் குழந்தைகளை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டனர். மழைநீரை அகற்றும்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • 15 Oct 2024 10:33 AM GMT

    அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை

    கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய துறைகள் வழக்கம்போல் இயங்கும். தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  • 15 Oct 2024 10:23 AM GMT

    4 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 15 Oct 2024 10:18 AM GMT

    கடலுக்கு செல்ல வேண்டாம்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

    வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    தமிழக கடலோர பகுதிகள்

    15.10.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 15 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையிடையே ட்டர் வேகத்திலும் வீரக்கூடும்.

    16.10.2024 முதல் 18.10.2024 வரை: வடதமிழக கடலோரப் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    19.10.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    15.10.2024: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    16.10.2024: தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆத்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    17.10.2024: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    18.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மற்றும் மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    19.10.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    அரபிக்கடல் பகுதிகள்

    15.10.2024: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 இவோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    16.10.2024 முதல் 19.10.2024 வரை: கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

  • 15 Oct 2024 9:43 AM GMT

    விழுப்புரம் அருகே சத்திப்பட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது மரம் முறிந்து விழுந்ததில் பாலகிருஷ்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார்.

  • 15 Oct 2024 9:36 AM GMT

    கனமழை எதிரொலி: சென்னையில் 10 விமானங்கள் ரத்து

    கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 விமானங்களின் சேவை தாமதமாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • 15 Oct 2024 9:36 AM GMT

    தத்தளிக்கும் சென்னை.. மின்சாரம் துண்டிப்பு

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

    வியாசர் பாடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வியாசர்பாடி பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. முல்லை நகர், பாரதி நகர் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

  • 15 Oct 2024 9:17 AM GMT

    மழை தண்ணீர் தேங்கியதால் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன

    சென்னையில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நகரில் மொத்தம் 21 சுரங்கப்பாதைகள் உள்ளன. அதில் பெரம்பூர், வியாசர்பாடி கணேசபுரம், தி.நகர் துரைசாமி, மேட்லி ரோடு, சுந்தரம் பாயிண்ட் ஆகிய 5 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.


Next Story