இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்?

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை
தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 25ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இந்நிலையில், இன்று இரவு 10 மணிவரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






