மாசி திருவிழா: திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


மாசி திருவிழா: திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
x
தினத்தந்தி 8 March 2025 9:15 AM (Updated: 8 March 2025 1:25 PM)
t-max-icont-min-icon

மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்த வந்தனர்.

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக மாசி திருவிழா நடைபெறும் நிலையில், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வருகை தந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story