சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
x
தினத்தந்தி 18 Dec 2024 3:37 PM IST (Updated: 18 Dec 2024 4:40 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு, வடபழனி, அண்ணா சாலை, அசோக் நகர், கோயம்பேடு, மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.


Next Story