சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான 'ரெட் அலர்ட்' வாபஸ் - வானிலை மையம்


சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் -  வானிலை மையம்
x
தினத்தந்தி 16 Oct 2024 6:46 AM IST (Updated: 16 Oct 2024 11:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

Live Updates

  • 16 Oct 2024 8:56 AM IST

    சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது

    சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால், இன்று மழை பெருமளவு குறைந்துள்ளதால் தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர் வடிந்தது. இதனால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது

     


  • 16 Oct 2024 8:12 AM IST

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 16 Oct 2024 7:28 AM IST

    சென்னையில் காலை 10 மணி வரை மழை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 16 Oct 2024 6:48 AM IST

    அதிகாலை முதல் லேசான மழை

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது


Next Story