தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story