அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (8-ம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளை அடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story