மதியம் 1 வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மதியம் 1 வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Related Tags :
Next Story