அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது


அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
x

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவு, கேரளா மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும், கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், தென்கிழக்கு- மத்தியகிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 12-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.


Next Story