கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நா.த.க வழக்கு


கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நா.த.க வழக்கு
x
தினத்தந்தி 27 March 2025 8:29 PM (Updated: 27 March 2025 8:39 PM)
t-max-icont-min-icon

மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த உத்தரவு அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தும்படி அனைத்து செயல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே, இதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். மருதமலை முருகன் கோவிலிலும் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தார்.


Next Story