"போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்


போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது..: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்
x

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, ஒரு தந்தையாக உருக்கமான வேண்டுகோளை வைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

போதையின் பாதையில் இளைஞர்கள், மாணவர்கள் செல்லக் கூடாது என கேட்டுக்கொள்வதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள்...* போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.* போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




Next Story