ரீல்சுக்காக ரெயிலின் படிக்கட்டில் நடனம் ஆடிய இளம்பெண்; நெட்டிசன்கள் கண்டனம்


ரீல்சுக்காக ரெயிலின் படிக்கட்டில் நடனம் ஆடிய இளம்பெண்; நெட்டிசன்கள் கண்டனம்
x

வீடியோ வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி,

சமூக வலைதளங்களில் லைக் பெறவும், பாலோயர்களை அதிகரிக்கவும் ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் பகுதிகளிலும், விரைவாக செல்லும் ரெயிலின் முன்பும் நின்றும் செல்பிக்களையும், வீடியோக்களையும் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அவர்களின் இந்த ஆர்வம் சில சமயங்களில் ஆபத்தில் முடிந்து விடுகிறது. தவிரவும், மற்றவர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாகவும் அமைந்து விடுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஷகீலா பானு என்ற அந்த இளம்பெண் ரெயிலின் படிக்கட்டில் நின்றபடி, ரீல்சுக்காகவும், லைக்குகளுக்காகவும் ஆபத்து தரும் வகையிலான வீடியோவை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரெயில்வே போலீசார், அந்த பெண்ணின் முகவரியை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story