ஊட்டியில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் பலி


ஊட்டியில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 4 Jan 2025 3:23 AM IST (Updated: 4 Jan 2025 5:56 AM IST)
t-max-icont-min-icon

கடும் குளிர் காரணமாக நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இத்தலார் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (வயது 34) என்பவர் நேற்று முன்தினம் இரவு கடும் குளிர் காரணமாக நெருப்பு மூட்டி உள்ளார். அப்போது வீட்டில் அவருடைய மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4) மற்றும் உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் இருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்து புகை வந்து உள்ளதை அக்கம்பக்கத்தினர் பார்த்து கதவை தட்டி உள்ளனர். ஆனால், கதவு திறக்கப்பட வில்லை.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்ததில் வீட்டில் இருந்த 5 பேரும் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக மயங்கி கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், ஜெயபிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


Next Story