ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
விழுப்புரம்,
கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் இரவு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு எஸ்.2 பெட்டியில் பயணம் செய்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த ரெயில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது சிவகங்கை மாவட்டம் கீழ்தாலூர் பகுதியை சேர்ந்த மணி மகன் கண்ணன் (வயது 33) என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






