திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய பெண் பிணம்; அதிர்ச்சி சம்பவம்


திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய பெண் பிணம்; அதிர்ச்சி சம்பவம்
x

அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் நேற்று மதியம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலிசார், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கடலில் குளித்தபோது அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story