சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து - அதிர்ச்சி வீடியோ


சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து -  அதிர்ச்சி வீடியோ
x

லாரி மோதி கீழே விழுந்த கமலாவின் தலை மீது முன் சக்கரம் ஏறி, இறங்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

கோவை ,

கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் சிமெண்ட் கலவை லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. லாரியை கமலா கடந்து செல்லும் நிலையில், அதனை கவனிக்காமல் டிரைவர் லாரியை இயக்கியுள்ளார். இதனால் எதிர்பாராதவிதமாக சிமெண்ட் கலவை லாரியின் முன்சக்கரத்தில் சிக்கி கமலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிமெண்ட் கலவை லாரி மோதி கீழே விழுந்த கமலாவின் தலை மீது முன் சக்கரம் ஏறி, இறங்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

1 More update

Next Story